ஜோ பைடன் உறுதி

வார்சா, பிப். 23-
உக்ரைன் மீதான ரஷியா போர் நாளை (வெள்ளிக்கிழமை) ஓர் ஆண்டை நிறைவு செய்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றதும், அங்கு ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய அவர் கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடிக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்ததும் போரை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.நமது முதுகில் குத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டன ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை பகடைக்காயாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துகிறார்கள். உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகள்தான் முழுப் பொறுப்பாகும்” என கூறினார்.