டயமண்ட் லீக் மீட் தொடர்- சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

லாசேன்: ஆக.27 – சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், செப்டம்பர் 7ம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெறும் டயமண்ட் லீக் பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளார்.
காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை. சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற்றன.