டாக்டரை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சிறுத்தை – பெங்களூரில் தொடரும் பீதி

பெங்களூர் : நவம்பர் . 1 – பொம்மனஹள்ளி சுற்றுப்பகுதியில் உள்ள மக்களின் உறக்கத்தை கெடுத்துள்ள சிறுத்தையை சிறைபிடிக்க நடந்து வரும் முயற்சிகள் இது வரை வெற்றிபெறாத நிலையில் இந்த சிறுத்தையை பிடிக்க முயற்சித்த கால்நடை மருத்துவர் கிரண் என்பவரை தாக்கிவிட்டு சிறுத்தை தப்பியோடியுள்ளது. ஆனேக்கல் கிருஷ்ணா ரெட்டி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சிறுத்தை தங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் வனத்துறை நேற்று பிற்பகல் முதலே நடவடிக்கையை துவங்கியுள்ளனர். இந்த சிறுத்தை பாழடைந்த கட்டிடத்தின் நிலப்பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்க்கு மயக்க ஊசி கொடுத்தும் எந்த பயனும் இல்லைப் . வனத்துறை அதிகாரிகளுடன் இருந்த மயக்க ஊசி மருத்டுவர் கிரண் என்பவரை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு கழுத்தில் காயங்களேற்பட்டுள்ளது. இதே வேளையில் துப்பாக்கி சூட்டு நிபுணர் தன்ராஜ் என்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இப்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரினும் அவருடைய நிலைமை கவலைக்கிடமாயுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று மாலை தங்கள் நடவடிக்கையை நிறுத்திவைத்திருந்த வன துறை அதிகாரிகள் இன்று அதிகாலை மீண்டும் நடவடிக்கையில் இறந்கியுள்ளனர் . பொதுமக்கள் சாலைகளில் திரியாத வகையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. கிருஷ்ணா ரெட்டி தொழிற்பேட்டைக்கு தொடர்பு கொள்ளும் வீதியும் முழுதுமாக மொட்டுள்ளது. இந்த சிறுத்தை பிடிக்கும் நடவடிக்கைக்கு சில சிறப்பு குழுக்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. ஹுனசூரிலிருந்து வந்துள்ள வள விலங்குகள் பாதுகாப்பு குழுவினர் இந்த நடவடிக்கையில் இன்று இறங்க உள்ளனர். இன்றைய நடவடிக்கையின் சிறப்பு எனில் ஹுனசூரிலிருந்து மிக்க சிறப்பு வாய்ந்த தூப்பாக்கி சுடும் நிபுணரும் கலந்து கொண்டுள்ளார். வன விலங்குகளை பிடிக்கும் மிக சிறந்த குழு இதுவாகும். ஏற்கெனவே வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழு சிறுத்தை பதுங்கியுள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகில் வந்து சேர்ந்துள்ளனர். தவிர இந்த கட்டிடத்தின் முழு உருவகம் பற்றிய வரைபடத்தையும் தருவித்துள்ளனர். இந்த நிலையில் எப்படியும் இந்த சிறுத்தை பிடிபடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.