டாக்டர் அம்பேத்கர் பெயர் பலகை விவகாரத்தில் வன்முறை – 25 பேர் காயம்

மைசூர், ஜன. 30- ஜனவரி. 30 – அரசியல் சாசன சிற்பி அம்பேத்கர் பெயர் பலகை பயன்படுத்துவது தொடர்பாக இரண்டு கோஷ்டிகளுக்கிடையே தகராறு நடந்திருப்பதுடன் பி எஸ் ஐ மற்றும் மூன்று போலீஸ் ஊழியர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயங்கலடைந்துள்ள சம்பவம் நஞ்சன்கூடு தாலூகாவின் ஹல்லரே என்ற கிராமத்தில் நேற்று இரவு நடந்துள்ளது. இந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட வாழுங்கள் சேதமடைந்திருப்பதுடன் தகவல் அறிந்து கூடுதல் போலீசார் விரைந்து வந்து நிலைமையை சமாளித்துள்ளனர். ஆனாலும் தற்போது அந்த பகுதியில் நிலைமை நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. ஹல்லரே கிராமத்திலிருந்து கூறா கிராமத்திற்கு செல்லும் சாலைக்கு பெயரிடுவது தொடர்பாக ஒரு கோஷ்டியின் சில இளைஞர்கள் உள்ளூர் கிராம பஞ்சாயத்திற்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் பி டி வோ அலுவலகத்திலிருந்து அனுமதியும் பெற்றுள்ளனர். ஆனால் பெயர்ப்பலகை வைப்பதற்கு மற்றொரு கோஷ்டியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெயர் பலகை வைக்கும் பணி தள்ளிபோடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு கோஷ்டிகளுக்கிடையே பகைமை உண்டாகி மோதலுக்கு காரணமாகியுள்ளது . பின்னர் இரண்டு கிராமங்களிலும் கல் வீச்சு தாக்குதல்கள் நடந்துள்ளது. பின்னர் வானங்களையும் போராளிகள் சேதப்படுத்தியுள்ளனர்.தாலூகா போலீஸ் அதிகாரி சீமா , ஏ எஸ் பி நந்தினி மற்றும் டி வொய் எஸ் பி கோவிதராஜு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீஸ் காவலை அதிகரித்திருப்பதுடன் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.