பெங்களூரு, செப். 8: பெங்களூரில் செப். 11 இல் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் கருநாடகத் தமிழர் நாள் விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரு குயின்ஸ் சாலை இலக்கம் 15 முதல்தளத்தில் உள்ள இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸில் செப். 11 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை தமிழ் இதழியல் செம்மல் முனை.பா.சு.மணி பிறந்தநாளையொட்டி, கருநாடகத் தமிழர் நாள் விழா கொண்டாடப்படுகிறது..
விழாவில் முனை.பா.சு.மணி நினைவு நூலகம் திறக்கப்படுகிறது. அதே நாளில் இலவச அரசு சேவைகள் வழங்கல் மையத்தின் சேவை தொடங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறப்புப் பாட்டரங்கம், ஐஏஎஸ் ஆக ஆசைப்படு- வழிகாட்டி சந்திப்பும் நடக்கிறது.இதில் வரவேற்புரையை.ஆ.வி.மதியழகன் நிகழ்த்த, தலைமையை லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளியின் செயலாளர் அ.மதுசூதனபாபு வகிக்கிறார். அ.செந்தில்நாதன், சொ.தண்டபாணி, .வி.வெங்கடேசன், ஆர்.எம்.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக தினச்சுடர், சஞ்சேவாணி ஆகியவற்றின் ஆசிரியர் பா.தே.அமுதன் கலந்து கொள்கிறார்.வாழ்த்துரையை ஓய்வு பெற்ற சுங்கத்துறை கூடுதல் இயக்குநர் கோ.மணிவாசகம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் ஆகியோர் வழங்குகின்றனர். விழாவை தொடக்கி வைத்து, சிறப்புரை ஆற்றுகிறார் டாக்டர் வி.இராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ். நூலகம் திறந்துவைத்து, விழா பேருரை ஆற்றுகிறார். கருநாடக அரசின் காவல்துறை கூடுதல் தலைவர் எஸ்.முருகன்.
வாராது வந்த மாமணி என்ற தலைப்பில் முனைவர் தேவி இராஜேஷ் தலைமையில் நடைபெறும் சிறப்பு பாட்டரங்கத்தில் பாவலர்கள் மா.வித்யா, செ.நந்தினி, வி.அனுன்சியா, ஜுவேரியா தஹ்சீன், பேரா.தீபா, சு.சரண்யா ஆகியோர் பங்கேற்கின்றனர். நன்றியுரையை கவி.தினகரவேலு ஆற்ற, விழாவை தொகுத்து வழங்குகிறார் முத்துமணி நன்னன். விழாவில் மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. விழாவில் நண்பகல் உணவு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















