டாக்டர் ராஜ்குமார் 95 வது பிறந்தநாள் நினைவிடத்தில் ரசிகர்கள் அஞ்சலி

பெங்களூர் : ஏப்ரல். 24 – கன்னட திரையுலகில் சுமார் ஐம்பதாண்டு காலம் கோலோச்சி , கன்னட மாநிலத்தின் கலாச்சார பிரதிநிதியாக நிலைத்த மகா நடிகர் டாக்டர் ராஜ்குமார் ஆவார். நடசார்வபௌமா , கான கந்தர்வா , ரணதீர கண்டீரவா , என பல விருதுகளை பெற்றுள்ள கன்னட திரையுலகின் ஒரே நடிகர் டாக்டர் ராஜ்குமார் மட்டுமே . இன்று கலைவாணியின் அருள் பெட்ரா தவப்புதல்வன் டாக்டர் ராஜ்குமாரின் பிறந்தநாள் . இவர் உயிருடன் இருந்திருந்தால் கோடிக்கணக்கான ரசிகர்களுடன் தன்னுடைய 95 வது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடியிருப்பார். அனால் தற்போது இவருடைய நினைவு மட்டுமே மாநில மக்கள் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் நிலைத்துள்ளது. இப்போதும் ராஜ்குமார் பெயரில் பல பொதுப்பணிகள் அவருடைய ரசிகர்களால் செய்யப்படுகிறது. ரசிகர்களை தேவர்கள் என்று அழைத்த ராஜ்குமாரின் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள ராஜ்குமார் நல்ல வகையில் வாழ வேண்டும் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன்னுடைய பல திரைப்படங்கள் வாயிலாக கூறி சென்றுள்ளார். தான் வாழ்ந்த நாள் முழுக்க மிகவும் எளிமையான மற்றும் எடுத்துக்காட்டான வகையிலேயே டாக்டர் ராஜ்குமார் வாழ்நதார் . எளிமையின் தோற்றமாய் வாழ்க்கையின் நல்ல தரங்களை தூக்கிப்பிடித்து இன்று வரையிலும் கன்னட திரையுலகின்ஒப்புயர்வற்ற நடிகராக திகழ்வது மட்டுமின்றி தென் இந்தியாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக நிலைக்கிறார். கன்னட திரையுலகில் மாபெரும் அளவில் வளர்ச்சி கண்டு ஈடிணையற்ற நடிகராக புகழ் பெற்றவர் டாக்டர் ராஜ்குமார் என்றால் மிகையல்ல . 70 முதல் 90கள் வரை இவருடைய திரைப்படங்கள் கன்னட திரைப்பட ரசிகர்களின் உயிர் நாடியாய் இருந்தது. பங்காரத மனுஷ்யா போன்ற இவருடைய திரைப்படங்களை பார்த்து தங்கள் வாழக்கை முறைகளை மாற்றிக்கொண்டோர் பலருண்டு. மாநிலத்தின் நிலம் நீர் மற்றும் மொழி குறித்த பிரச்சனைகள் எழுந்த போதெல்லாம் முன்னின்று கன்னட மாநில நலனுக்காக போராடியவர் ராஜ்குமார் . இவர் போராட்டத்தில் குதிக்கிறார் என்றாலே மாநில அரசுகள் நடுங்கிய காலங்கள் உண்டு தான் மக்களால் தான் மேலே உயர்ந்தேன் என அடிக்கடி கூறிவந்தார். இந்திய திரையுலகத்தில் கதாநாயகன் மட்டுமில்லாது சிறந்த பின்னணி பாடகராகவும் திகழ்ந்தவர் டாக்டர் ராஜ் குமார். இன்று வரை கன்னட திரையுலகளில் இவருக்கு ஈடு இணை என்பவர் கிடையாது என்பது கன்னட ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இவர் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்பதே இவருடைய ரசிகர்களின் கூக்குரலாய் உள்ளது.