டாஸ்மாக்கில் பறக்கும் படை ஆய்வு

சென்னை: ஏப்.1-
மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் டாஸ்மாக்கடைகளில் ஒரே நபருக்கு அதிகமான மது பாட்டில்கள் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மது வாங்கிக் கொண்டு வெளியே செல்பவர்கள் அளவுக்கு அதிகமான மதுபாட்டில்களுடன் வெளியே வருகிறார்களா, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
மேலும், முந்தைய வாரங்களில் எவ்வளவு மதுபாட்டிகள் விற்பனையாகி இருக்கிறது என்பதை கணக்கிட்டும் பறக்கும்படையினர் ஆய்வு செய்கின்றனர். அதேநேரத்தில், மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி பதுக்கி வைத்து யாரேனும் விற்பனை செய்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.