டாஸ்மாக் ஊழியர்கள் 12 பேர் சஸ்பெண்ட்

வேலூர்,நவ.21-
மது பாட்டில்களை, அதிக விலைக்கு விற்பனை செய்ததற்காக, வேலூரில், 12 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வேலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில், அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம், 29ல், பழைய பஸ் ஸ்டாண்டில் ஒரு கடை, பென்னாத்தூரில் இரண்டு என, மூன்று கடைகளில் சோதனை செய்து கணக்கில் வராத, 61 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். பின்னர், ஒன்பது விற்பனையாளர்கள், மூன்று மேற்பார்வையாளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் துறை ரீதியான விசாரணை நடத்தி, 12 ஊழியர்களை, மண்டல முதுநிலை மேலாளர் ராஜ்குமார் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்