டிக்கெட் கட்டணம் வழங்காத கர்நாடக அரசு – தடுமாறும் பிஎம்டிசி

பெங்களூர், ஜூன் 6-
சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கான முழு டிக்கெட்டையும் மாநில அரசு பி.எம்.டி.சி., க்கு பல கோடி ரூபாய் பணம் செலுத்தவில்லை. பாக்கியால், ஊழியர்களின் சம்பளம், டீசல், உதிரி பாகங்கள் வாங்குதல், உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க முடியாமல் அந்த நிறுவனம் தினறி வருகிறது.
நஷ்ட சூழலில் சிக்கித் தவித்த பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற பி.எம்.டி.சி., ‘சக்தி யோஜனா’ நிதி மேலும் இழப்பை அதிகரித்துள்ளது.
ஆனால், பெண் பயணிகளின் டிக்கெட் கட்டணத்தை அரசு உரிய நேரத்தில் திருப்பித் தருவதில்லை. பெண் பயணிகளுக்கு நிலுவையில் உள்ள டிக்கெட் தொகையை திரும்ப வழங்க கோரி அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடிதம் எழுதி ஒரு மாதம் கடந்தும், இதுவரை அரசு பணம் வழங்கப் படவில்லை.
2023 ஜூன் 11ல் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அரசு அறிவித்து பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்கும் சக்தி யோஜ்னா திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இது அமலுக்கு வந்த பிறகு பி எம் டி சி பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
பஸ் சேவைக்கான தேவையும் அதிகரித் துள்ளது. ஆனால் தேவையான அளவு போக்குவரத்து வசதியை அரசு செய்து தரப்படவில்லை.
ரூ.181. 37 கோடி இருப்பு சக்தியோஜனா திட்டத்தின் கீழ் நான்கு போக்குவரத்து நிறுவனங்களால் ஜூன் 2023 மார்ச் 2024 வரை பெண்களுக்கான இலவச டிக்கெட்டுகளின் மதிப்பு ரூ.4377.96 கோடி.
என செலவு மதிப்பிடப்பட்டது. ஆனால் 2023. 24 பட்ஜெட்டில் 2800 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டவை மட்டுமே.
இதனால் மீதமுள்ள

 1. 96 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் இதனை வழங்க கோரி போக்குவரத்து நிறுவனங்கள் அரசுக்கு தெரிவித்துள்ளன.
  அதற்கு இன்னும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் பரிசீலித்து வருகிறது.பி.எம்.டி.சி.க்கு இதுவரையில் வழங்கப்பட்டது
  ரூ.338. 85 கோடி. மீதி
  ரூ.181. 37 கோடி பாக்கி வைத்துள்ளது. இதனால் ஊழியர்கள் சம்பளம், டீசல், உதிரி பாகங்கள் வாங்குதல் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு மானியம் தேவைப்படுவதால் பெண்களின் இலவச பயணத்திற்கான டிக்கெட் கட்டண நிலுவைத் தொகையை அரசிடம் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நிலுவைத் தொகையை அரசு தரவில்லை. இதனால் அந்த நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. தினமும் 21- 22 லட்சம் பேர் தினமும் பயணம் செய்கின்றனர்.இந்த திட்டம் அமலுக்கு வரும் முன்
  56 ஆயிரத்து 646 சுற்றுகள் மட்டுமே இயங்கப்பட்டன. இப்போது 59 ஆயிரத்து 186 சுற்று பயணங்களாக இயக்கப் படுகின்றன.
  தினமும் 11.37 லட்சம் கிலோமீட்டர் பயணிக்கப்படுகிறது. சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் தினம் 21 முதல் முதல் 22 லட்சம் பெண்கள் இலவச பயணத்தால் பயனடைகின்றனர். இலவச பயணிகள் டிக்கெட்டுக்கு சராசரியாக 260 கோடி ரூபாய் செலவாகும்.
  இத்திட்டம் அமுலுக்கு வந்ததில் இருந்து இதுவரையில் 70.45 கோடி பெண்கள்
  பி எம் டி சி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதன் டிக்கெட் மதிப்பு 923. 60 கோடி இதன் காரணமாக கடன் சூழலில் இருந்து அமைப்பு மீண்டும் மீண்டுவர முடியவில்லை.
  பல ஆண்டுகளாக நஷ்டப் பாதையில் இயங்கி வரும் பி எம் டி சி ஊழியர்களின் சம்பளம் டீசல் கொள்முதல் செலவு, உதிரி பாகங்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகையை சமாளிக்க முடியாமல் தள்ளாடி வருகிறது.
  டீசல் பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட வில்லை மாறாக கிலோமீட்டருக்கு ரூபாய் 23 நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் நிறுவனம் லாபம் ஈட்டுவதற்காக மின்சார பஸ்களில் கவனம் செலுத்துகிறது இந்த அமைப்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.130.40 கோடியும், பி.எப். நிலுவைத் தொகை ரூ.561. 69 கோடியும், ஜனவரி 2023 முதல் மே 2024 வரைரூ‌ 561. 69 கோடியும் டீசல் சப்ளை செய்த எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.140 .29 கோடியும், ஊழியர்களின் டி.ஏ., ரூ.43.04 கோடியும் இதர நிலுவை தொகை 341.69 கோடியும் செலுத்த வேண்டும். கடனுக்காக கடன் வாங்கப்பட்டுள்ளது.
  மேலும் ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகளை இயக்கும் நிறுவனங்களுக்கு ரூ.45. 90 கோடி செலுத்த வேண்டியுள்ளது. எனவே சக்தி யோஜனா திட்டத்தில் நிலுவைத் தொகையுடன் மானியமும் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.