
மைசூர் : செப்டெம்பர் . 1 – கொலை விவகாரம் ஒன்றிலிருந்து சிறையிலிருந்து விடுதலை யாகி வந்த பின்னர் டிக் டாக்கில் மிகவும் புகழ் பெற்றிருந்த பெங்களூருவை சேர்ந்த ஸ்டைல் நவீன் என்பவரை கொலை செய்த 8 குற்றவாளிகளை நஞ்சன்கூடு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 27 அன்று இரவு நகரின் அரண்மனை எதிரில் உள்ள வராஹ வாயில் அருகில் இளம் பெண் ஒருவலுடன் ரீல்ஸ் படம் பிடித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே நவீனை இரண்டு கார்களில் வந்த குற்றவாளிகள் கடத்தி சென்று காரில் திரிந்தபடியே நவீனை கொலை செய்துவிட்டு பின்னர் உடலை நஞ்சன்கூடு அருகில் உள்ள கால்வாயில் வீசியெறிந்துவிட்டு தப்பியோடயுள்ளனர் இது குறித்து நஞ்சன்கூடு கிராமத்தார் போலீசார் அடையாளம் தெரியாதவர் கொலை என வழக்கு பதிவு செய்திருந்தனர்.. பின்னர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு 8 பேர் குற்றவாளிகளை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூர் மாநகராட்சி உறுப்பினர் ஒருவரின் அண்ணன் மகனை கடந்த 2020ல் ஜூலை மாதத்தில் 13 பேர் கொண்ட கும்பல் கங்களிப்புறா போலீஸ் சரகத்தில் கொலை செய்திருந்தனர் . இந்த விவகாரத்தில் நான்கு நண்பர்களுடன் ஸ்டைல் நவீன் என்பவனும் போலீசில் சரணடைந்து சிறைக்கு சென்றிருந்தான். இவன் தற்போது ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் டிக் டாக் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பிரபலமாக வளர்ந்து கொண்டிருந்துள்ளான். இவனை பழைய பகை காரணமாக கொலை செய்ததாக குற்றவாளிகள் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர் . இந்த சம்பவம் நடந்த அன்று வழிகாட்டி சந்துரு என்பவர் இந்த கொலை குறித்து கே ஆர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் இறந்தவர் உடல் நஞ்சன்கூடு கிராமத்தார் பகுதியில் கிடைத்துள்ளதால் இந்த விவகாரம் குறித்து எங்கு விசாரணை n=நடத்த வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டது . தற்போதைக்கு குற்றவாளிகளை கைது செய்துள்ள நஞ்சன்கூடு போலீசார் வழக்கை நகரின் கே ஆர் நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றும் வாய்ப்புகள் உள்ளன.