டிஜிட்டல் கரன்சி

சண்டிகார், ஜனவரி. 26 – பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகாரில், ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில், ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் அஜய்குமார் சவுத்ரி பேசியதாவது:- ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் கரன்சியை மொத்த பயன்பாட்டுக்கும், சில்லரை பயன்பாட்டுக்கும் தனித்தனியாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தியது. பணத்தின் பரிணாமத்தில் இது ஒரு மைல்கல். சோதனை முறை முடிந்து, டிஜிட்டல் கரன்சியை படிப்படியாக அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது, 115 நாடுகள் டிஜிட்டல் கரன்சி வெளியிட பரிசீலித்து வருகின்றன. ஜி20 அமைப்பை சேர்ந்த 18 நாடுகள் பரிசீலித்து வருகின்றன.