டிடிவி தினகரன் மறுப்பு

சென்னை, மார்ச் 14: பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். தொகுதி பற்றி உறுதியான முடிவு வந்த பிறகு நான் தெரிவிக்கிறேன். தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என பாஜகவிடம் இருந்து எந்த நிர்பந்தமும், அச்சுறுத்தலும் எங்களுக்கு இல்லை. குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, மக்களவைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
அமமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை தான் விரும்புகிறார்கள். எனவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் தொகுதிகளின் பட்டியலை வழங்கி இருக்கிறேன். திமுக என்ற தீய சக்தியை இந்த தேர்தலில் முறியடிக்கவேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள் வரும் என்று தான் இந்த கூட்டணி அமைந்திருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.