டியூசனுக்கு வந்த மாணவனை மது கொடுத்து பலாத்காரம் செய்த ஆசிரியை

திருவனந்தபுரம்,நவ. 8 – நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியை, வேலியே பயிரை மேய்ந்த கதையாக டியூசனுக்கு வந்த மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன், கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டுள்ளான். சமீபத்தில் நடத்தப்பட்டுள்ள தேர்வுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்களே எடுத்துள்ளான்.சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்த மாணவனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள், அவனை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர். அப்போது மாணவன் சொன்ன தகவல் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கடந்த சில நாட்களாக மாணவன், ஒரு ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றுள்ளான்.
அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, அதனை மறந்து மது கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். மாணவன் கூறிய தகவலைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மண்ணுத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியையை கைது செய்தனர்