டிராக்டர் வேன் மோதல் 3 பேர் சாவு

தாவணகெரே : ஜனவரி . 17 –
டிராக்டர் மாருதி வேன் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் இந்த கோர விபத்து நடந்ததுட்ரெக்டர் மீது அதிவேகமாகவந்த மாருதி ஓம்னி வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்த்தை சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ள சம்பவம் சன்னகிரி தாலூக்காவின் குள்ளேனேஹள்ளி அருகில் பேரூரு வீதியில் மாநில நெடுஞசாலையில் நடந்துள்ளது. சன்னகிரி தாலூகாவின் நாரஷெட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த ருத்ரேசப்பா (64) , மல்லிகார்ஜுன (62) மற்றும் கங்கம்மா (40) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள்.இந்த காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ள நிலையில் இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சந்தேபெண்ணூறு பகுதியிலிருந்து சன்னகிரிக்கு சென்றுஒண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. புல்லை நிரப்பிக்கொண்டு வந்த ட்ரெக்டர் மீது கார் மோதியத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் பரபரப்பு நிலவியது போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்