
பெங்களூரு,அக்.19-
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக துணை முதல் அமைச்சரும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான டி. கே.சிவக்குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து டி கே சிவக்குமார் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகன வழக்கில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் அளித்துள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தடை சில மாதங்கள் தொடர்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் டி கே சிவகுமார் மீது போடப்பட்ட எஃப் ஐ ஆர் ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கியது.சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி டி.கே. சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார் டி.கே.சிவகுமார் மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை வெளிவர வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணைக்கு முந்தைய மாநில அரசு பரிந்துரை செய்தது. மாநில அரசின் அறிவிப்பை எதிர்த்து டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த மனு மனு நிதான விசாரணை ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.
2014-18ஆம் ஏராளமான முறைகேடுகள் மூலம் டி.கே. சிவகுமார் சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி டி.கே.சிவகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த வழக்கில் முன்பு
டி கே சிவகுமாரின் டெல்லி பெங்களூரு வீடுகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் சிபிஐ சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சட்டவிரோத பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.