டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமானவருக்கு சிபிஐ நோட்டீஸ்

பெங்களூர் : ஆக.26 – சி பி ஐ சோதனைகள் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமாரின் நெருங்கிய நண்பர் விஜய் முலுகுந்த்திற்கு சி பி ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2020 அக்டோபர் ஐந்தாம் தேதி சி பி ஐ சோதனை நடத்தியது.
அதே மாதத்தில் 30 அன்று பெங்களூரின் சி பி ஐ அலுவலகத்திற்கு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த விஜய் முலுகுந்தா இது எந்த விவகாரம் என்பதே தெரியவில்லை. ஆனாலும் சி பி ஐ ய்க்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு கொடுப்பேன். இதற்கு முன்னரே அவர்கள் என்னை அழைத்தபோதிலும் நான் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். இப்போது மீண்டும் என்னை ஏன் அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக இப்படி அடிக்கடி என்னை அழைக்கிறார்கள்.
நண்பனுக்கு சி பி ஐ நோட்டீஸ் கொடுத்திருக்கும் நிலையில் வருமானத்தைவிட அதிக சொத்துக்களை சேர்த்துள்ள புகாரில் சி பி ஐ வாயிலாக மீண்டும் டி கே சிவகுமாரை விசாரணைக்கு அழைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
2013 முதல் 2018 வரை எம் எல் ஏவாக இருந்த காலகட்டத்தில் சட்ட விரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் 2020 அக்டோபர் 5 அன்று டி கே சி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சி பி ஐ சோதனைகள் நடந்தது. டி ஏ சட்ட விதிமுறைகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சி பி ஐ சோதனைகள் நடத்தியது. 74.93 கோடி ரூபாய்கள் வரை சட்ட விரோத சொத்து சேர்த்துள்ளதாக டி கே சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.