டி.கே.சிவகுமார் அதிகாரத்தை குறைக்க 3 துணை முதல்வர்கள்

பெங்களூர், செப். 22- கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமாரின் அதிகாரத்தை குறைக்க, 3 துணை முதல்வர்கள் ஏற்படுத்துவதாக உள்நோக்கம் தெரியவந்துள்ளது. சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் ஆகின்றன.இதற்குள் தலைவர்கள் மதிப்புக்காக உட்கட்சி பூசல் வெடித்து தெருவுக்கு வந்துள்ளது.விலைவாசி உயர்வு, வறட்சி, பயிர் சேதம், பல பிரச்சனைகள் சிக்கித் தவிக்கும் மக்களை சமாதானப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் எம்எல்ஏக்களும், ஊடகங்களில் பிரச்சனைகளை கிளப்ப ஆரம்பித்துள்ளார்கள். கோஷ்டி அரசியல் மேலும் சலசலப்பாக மாறுவதையே இது காட்டுகிறது. முதல்வர் சித்தராயையா, துணை முதல்வர் டி .கே. சிவகுமார் தனது செல்வாக்கு மண்டலத்தை ,இரண்டு தனித் தனி அதிகார மையங்களாக ஒருங்கிணைக்க வேலை செய்கின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை. முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் டி. கே. சிவகுமார் 135 இடங்கள் வென்றதை தங்களின் சாதனையாக சித்தரித் துள்ளார்கள். அதனால் தான் அரசின் பதிப்புரிமை யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை இன்னும் உயரோட்ட மாகவே இருக்கிறது. சில சமயங்களில் புகைப்படம் எடுப்பதற் காக மட்டுமே கைகளை பிடித்துக் கொண்டு அவர்கள் போஸ் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருமே தங்களின் பழைய கால அரசியலை நிறுத்தவில்லை என்பதற்காகவே, மூன்று துணை முதல்வர்கள் உருவாக்கும் தொடர்பான சர்ச்சையின் சாட்சி ஆகும். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 மாதமே உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், ஜாதி வாரியாக மூன்று துணை முதல்வர்கள் பதவி வழங்க வேண்டும் என, கூட்டுறவு துறை அமைச்சர் கே. என். ராஜண்ணா கூறியிருப்பது சர்ச்சைக்கு காரணமாக உள்ளது.இது ஒன்றும் இல்லாமல் உருவாக்கப்பட்ட வெறும் அறிக்கை அல்ல. வேகத்தை ,எதிர்கால நகர்வையும் முதல்வர் மீது தூக்கி எறியும் முயற்சியாகதுணை முதல்வர் டி .கே. சிவகுமார் ஈடுபட்டுள்ளார். அதிகாரம் கிடைக்காமல் உள்ள பி.கே. ஹரி பிரசாத் தனது அரசியல் எதிர்காலத்தை உயர்த்திக் கொள்ள ஈடிகா மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள், மூலம் காங்கிரஸ் முதல்வரை உருவாக்க முடிவு செய்துள்ளார் . சித்தராமையாவின் கவர்ச்சி அரசியலும் சாதுரியமும் ஹரிபிரசாத் இல்லாததால் ஜாதிப் பக்கம் காயை நகர்த்தி பார்த்து விலகிவிட்டார் .வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சித்தமையாவின் தூக்கத்தை கெடுப்பதே ஹரி பிரசாத் உள்நோக்க திட்டமாகும். அதனால் சித்தராமையா வை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் அளவுக்கு ஹரி பிரசாத் கீழே இறங்கிவிட்டார். இதற்கு பல தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள துணை முதல்வர் டி .கே. சிவகுமார் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை . சிவக்குமாரின் மவுனம் சித்ராமய்யா கோஷ்டிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து அரசு துறைகளையும் கண்காணிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இயல்பாகும். தனது கட்டுப்பாட்டில் உள்ள பெங்களூர் வளர்ச்சி நீர்வளத் துறையை முதல்வர் கண்காணிக்க துணை முதல் டி.கே சிவகுமார் அனுமதிக்கவில்லை. பெங்களூர் பிராண்டுக்கு மேலும் மெருகேற்ற வண்ணம் கொண்டு வரவும், முதலீட்டை ஏற்கவும், டி.கே. சிவகுமார் பல திட்டங்களை வகுத்து வருகிறார்.