டி.கே. சிவக்குமார் உட்பட பலர் கைது

புதுடெல்லி: ஜூன். 15 – நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருவதை கண்டித்து காங்கிரஸ் நடத்திவரும் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. இன்று ஒரு பக்கம் டயர்களுக்கு தீவைத்து கொளுத்தித்தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் டெல்லி போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கிடையில் வாக்கு வாதங்கள் நடைபெற்றது.மூன்றாவது நாளாகவும் காங்கிரஸ் தலைவர்கள் ஏ ஐ சி சி அலுவலகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை போராட்டம் நடத்த முயற்சித்திருப்பதுடன் இந்த பகுதியில் 144 பிரிவு தடை சட்டம் அமுலில் இருந்த நிலையில் பேரணி துவங்கிய உடனேயே அதை தடுக்க டெல்லி போலீசார் முயற்சித்தனர். அப்போது டெல்லி போலீசார் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட எம் பி டி கே சுரேஷ் , இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி வி ஸ்ரீனிவாஸ் , ஆகியோரை போலீசார் கை கால்களை பிடித்து தூக்கி போலீஸ் வாகனத்தில் நிரப்பினர். இந்த போராட்டத்தின் போது டி கே சுரேஷ் டெல்லி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் போராட்டத்தை நடத்த அனுமதி கோரினார். இதற்க்கு டெல்லி போலீசார் அனுமதிக்க வில்லை அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் டெல்லி போலீசார் டி கே சுரேஷை கைது செய்து தங்கள் வசம் அழைத்து சென்றனர்.