
பெங்களூர்.பிப்.23- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி பெங்களூரு தேவரஜீவனஹள்ளி கடுகோண்டனஹள்ளி பகுதிகளில் பயங்கர வன்முறை சம்பவங்கள ஏற்பட்டது. போலீஸ் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பு என்ஐஏ கடந்த 10 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. அதில் கூறி இருப்பதாவது வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் இவர்களில் 40 பேர் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் பைரோஸ் பாஷா முகமது ஷெரீப் முஜாமில்பாஷா ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்ர் ஆவர் திட்டமிட்டு இந்த வன்முறை நிகழ்ந்த பட்டதாகவும். சமூக ஊடகங்கள் மூலம் வன்முறை உணர்வு பரப்பப்பட்டதா குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது புலிகேசி நகர் தொகுதி எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி உறவினர் ஒருவர் வெளியிட்ட முக நூல் பதிவு தொடர்பாக வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது