டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஜிஎஸ்டி இல்லை

புதுடெல்லி, செப்.12-
டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெளிவுபடுத்தியுள்ளார்.
டீசல் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளித்த அவர், அதுபோன்ற எந்த யோசனையும் மத்திய அரசின் முன் இல்லை என்றார். 2070க்குள், கார்பன் டை ஆக்சைடை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, டீசல் உள்ளிட்ட மாசுகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் எரிபொருள் குறித்தும் எச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை மற்றும் பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், என்றார். டெல்லியில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிக மாசுபடுத்தும்” எரிபொருளைப் பயன்படுத்தி வாகனங்களைத் தயாரிப்பது ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதாகக் கூறினார். இந்நிலையில், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானது
ஜிஎஸ்டியை 10 சதவீதம் உயர்த்துவதற்கான கடிதம் தயாராக உள்ளது. டீசல் வாகனங்கள் மற்றும் அனைத்து இன்ஜின்களுக்கும் கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கக் கோரி நிதியமைச்சருக்கு மாலையில் கடிதம் அனுப்ப உள்ளேன் என்று கூறியிருந்தார் இந்த நிலையில்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதால், நிதின் கட்கரி, அப்படியொரு திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.