டெங்கு குணமான குழந்தைகள் சிறுவர்களுக்கு சுவாச பிரச்சனை

பெங்களூர், ஆக. 8-
டெங்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சுவாச நோய் தொற்றும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
டெங்கு நோயால் மீண்டு வந்த குழந்தைகளுக்கு அடுத்து, சுவாச பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் இடையே கவலை அதிகரித்துள்ளது.
இது குறித்து சி.எம்.ஐ. மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பரிமளா திருமலேஷ் இது குறித்து கூறுகையில்,
பருவ மழைக் காலம் வருகையுடன், முன்பு டெங்கு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பின்னர் சுவாசத்தொற்று அதிகரிப்பதை கவனித்து வருகிறோம். டெங்கு நோய்க்கு பிறகு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. இவர்களுக்கு இருமல், சளி, மூக்கடைப்பு, போன்ற சுவாச நோய் தொற்று ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் பொதுவாக சுவாச மாதிரிகளில் கண்டறியப்படுவதில்லை. ஆனால், அண்மையில் நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம். பருவமழையின் போது தொற்றுநோய் அபாயம் அதிகமாக இருப்பது, நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகப்படுத்துவது அவசியம். சத்தான உணவுகளை கடைபிடிக்க வேண்டும் .தடுப்பூசிகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்றார்.
ஸ்பார்ஷ் மருத்துவ மனையின் டாக்டர் சுனில் எம்., யூ கூறுகையில், டெங்கு ‘லுகோபீனியா’ நோயை தூண்டுகிறது. இந்த நோய் வெள்ளை ரத்த அணுக்கள் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வீழ்ச்சடைகிறது. குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
இவர்களுக்கு கடுமையான டெங்கு நோய் காரணமாக நுரையீரல் சுற்றி திரவம் தீங்குவதற்கு வழி வகுக்கலாம். இதன் விளைவாக தொற்று இல்லாத இருமல், சளி கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு, இருமல் தும்மல், உடல் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இது தொடங்கும். கொரோனா தொற்றுக்கு பிறகு, குழந்தைகளுக்கிடையே சுவாச நோய் தொற்று ஏற்பட்டு அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது.
பொதுவாக வைரஸ்களில் பரிசோதனை வசதிகள் இருப்பதால், முன்பு கவனிக்க தவறியதை கண்டறிய மருத்துவர்களுக்கு தற்போது உதவுகிறது .இன்புளுன்சியா ஏ, பி, மற்றும் எச்1என்1,
ஆர் .எஸ் .வி., அடினோ வைரஸ் போன்ற வைரஸ்கள் இப்போது மருத்துவ பயிற்சியாளர்களுக்கு கண்டறிய உதவுகிறது. என்றார்.
இது குறித்து பெங்களூர் பன்னார்கட்டாவில் உள்ள போத்தீஸ் மருத்துவமனை டாக்டர் யோகேஷ் குமார் கூறுகையில், சமீப வாரங்களில் டெங்கு நோய் பாதிப்பு இளம் வயதினரை பெரிதும் பாதிக்கிறது. ஐ .சி. யு., பிரிவில், பிளட் ளட் அளவுகள், ரத்த அழுத்தம் கவனிப்புகளை பாராட்டலாம். நோய் பாதிப்பு உள்ள சிறுவர்களை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். அத்தோடு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் இதன் பேரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்