டெல்லியில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய ஈஸ்வரப்பா

ஷிமோகா, ஏப்.4-
ஷிமோகா லோக்சபா தொகுதியில் பிஜேபியின் அதிருப்தி வேட்பாளரான முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவை, டெல்லிக்கு வருமாறு அமித் ஷா அழைப்பின் பேரில் டில்லிக்கு சென்றார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார் .செவ்வாய் கிழமை டெல்லிக்கு வருமாறு அமித்ஷா, ஈஸ்வரப்பாவை அழைத்தார். அதன் காரணமாக, புதன்கிழமை டெல்லிக்கு புறப்பட்டார். புதன்கிழமை டெல்லி செல்லும் முன்பாகவே கர்நாடகாவில் நடந்து வரும் எல்லா நடவடிக்கைகளும் நேரில் சொல்வதற்காக அவர் சென்றார். செவ்வாய்க்கிழமை அமித் ஷா அழைப்பின் பேரில் புதன்கிழமை டெல்லி சென்ற ஈஸ்வரப்பா, உள்துறை அமைச்சக அலுவலகத்தை தொடர்பு கொண்டார். ஆனால் அமித்ஷா ஈஸ்வரப்பாவை சந்திக்க வரவில்லை. எனவே அவர் டில்லியில் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் டெல்லிக்கு வருமாறு அழைத்தது அமித்ஷா. ஆனால் அவர் சந்திக்காததால், நான் ஷிமோகா லோக்சபா தொகுதியில் போட்டியிடுவேன். எடியூரப்பா மகன் ராகவேந்திராவை தோற்கடிப்பேன். எனக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்லாசி உண்டு. வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.