டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது

புதுடெல்லி, அக். 29- டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர் ரேகா குப்தா தலை​மையி​லான அரசு பல்வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கட்​டு​மானப் பணி​யின்​போது உரிய விதி​களைப் பின்​பற்ற அறி​வுறுத்​தப்​பட்டு உள்​ளது. வரும் நவம்​பர் 1-ம் தேதி முதல் பிஎஸ்-6 சரக்கு வாக​னங்​கள் மட்​டுமே டெல்​லிக்​குள் அனு​ம​திக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. டெல்​லி​யில் நேற்​றைய கணக்​கீட்​டின்​படி காற்று தரக் குறி​யீடு 315 புள்​ளி​களாக இருந்​தது. இந்த காற்றை சுவாசித்​தால் பொது​மக்​களின் உடல் நலனுக்கு அதிக தீங்கு ஏற்​படும் என்று மருத்​து​வர்​கள் எச்​சரித்து உள்​ளனர். இந்த சூழலில் காற்று மாசை கட்​டுப்​படுத்த டெல்​லி​யில் செயற்கை மழையை பெய்விக்க முதல்​வர் ரேகா குப்தா உத்​தர​விட்​டார். இதற்​காக கான்​பூர் ஐஐடி​யின் உதவி கோரப்​பட்​டது. டெல்லி அரசு மற்​றும் கான்​பூர் ஐஐடி இணைந்து டெல்​லி​யில் நேற்று செயற்கை மழையை பெய்விக்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​டது.