டெல்லியில் டி.கே.சிவகுமார் ஆஜர்

பெங்களூர், நவ.14 –
கர்நாடகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களம் இறங்கி உள்ள நிலையில் அதை முறியடித்து காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த பல முறைகளில் வியூகம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அமலாக்கத்துறை விசாரணை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுநேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டி கே சிவகுமார் இன்று டெல்லியில் அமலாக்கத்துறை (இ டி ) விசாரணைக்கு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக நவம்பர் 7 அன்றே விசாரணைக்கு ஆஜராகும்படி இ டி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார் மற்றும் அவருடைய சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி கே சுரேஷ் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நவம்பர் 6 அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு பாராட்டு விழா பெங்களூரில் இருந்த காரணத்தால் நவம்பர் 7 அன்று விசாரணைக்கு டி கே சிவகுமார் ஆஜராகாமல் சமயம் கேட்டிருந்தார். ஆனால் டி கே சுரேஷ் நவம்பர் 7 அன்று விசாரணைக்கு ஆஜரானார். நவம்பர் 7 அன்று விசாரணைக்கு ஆஜராகாமல் கால அவகாசம் கேட்டிருந்த சிவகுமாருக்கு இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி டி கே சிவகுமார் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக பல தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின் போது டி கே சிவகுமாரிடம் கேட்டு பெற்றுள்ளனர் என தெரிய வருகிறது. சில ஆவணங்களை அளிக்குமாறும் அமலாக்கத்துறையினர் டி கே சிவகுமாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும் முன்னர் டி கே சிவகுமார் நேற்று குடும்பசமேதராய் உஜ்ஜைனில் உள்ள மஹா காலேஷ்வரா கோயிலில் சிறப்பு பூஜைசெலுத்தினார்.
இன்று நேஷனல் ஜெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான டி கே சிவகுமார் சி பி ஐ மற்றும் பல்வேறு நீதிமன்றங்களின் முன்னர் இன்னும் நான்கு முறை விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது. ஒரே மாதத்தில் டி கே சிவகுமார் பல்வேறு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்கள் மற்றும் பல்வேறு விசாரணை நிறுவனங்களில் விசாரணைகளுக்கு ஐந்து நாட்கள் ஆஜராகவேண்டியுள்ளது.