டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: பிப். 8: டெல்லியில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து நடைபெறும் போராட்டத்தில் திமுக தோழமை கட்சிகளும் பங்கேற்றுள்ளன. நிதிப் பங்கீடு விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.