டெல்லியில் நாளை ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: மார்ச் 30: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த 21-ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, டி.ராஜா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான பகவந்த் சிங் மான் கூறும்போது, “
பஞ்சாபின் அனைத்து தொகுதிகளில் இருந்து தலா 1,000 பேர் டெல்லி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.