டெல்லி கொரோனா நோயாளிகள் கர்நாடகத்தில் சிகிச்சை


பெங்களூர் மே.4-
புதுடெல்லியை சேர்ந்த ஏராளமான கொரோனா நோயாளிகள் வட கர்நாடக மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்த மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது பெங்களூருக்கு விமானங்கள் மூலம் வந்த டெல்லிவாசிகள் மீண்டும் டெல்லி செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது ஏராளமான பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இவர்கள் கர்நாடகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் குறிப்பாக அதிக அளவில் வட கர்நாடக பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவலை வட கர்நாடக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் குறிப்பாக மத்திய அரசில் விஞ்ஞானியாக பணிபுரியும் ஒருவர் டெல்லியிலிருந்து பெங்களூர் வந்தார் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்