டெல்லி: சாந்தினி சவுக்கில் 9 மணி நேரமாக பற்றி எரிந்த தீ

புதுடெல்லி, நவ. 25 –
டெல்லி சாந்தினி சவுக்கின் பாகிரத் பேலஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்க சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். ரிமோட் கண்ட்ரோல் தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்து தொடர்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.