டெல்லி தொழிற்சாலை வெடி விபத்தில் 3 பேர் பலி, 6 காயம்

டெல்லி, ஜூன் 8:
டெல்லியின் நரேலா தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடி விப‌த்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள உணவு பதப்படுத்தும் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 6 பேர் காயமடைந்தனர். தொழிற்பேட்டை பகுதியில் சனிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இன்று அதிகாலை 3.35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது என தெரிவித்தனர்.பதினான்கு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கட்டிடத்திற்குள் இருந்து 9 பேர் மீட்கப்பட்டு நரேலாவில் உள்ள எஸ்எச்ஆர்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.அவர்களில் ஷியாம் (24), ராம் சிங் (30) மற்றும் பீர்பால் (42) என அடையாளம் காணப்பட்ட 3 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர், மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குழாய் ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்றார். பாசிப் பருப்பை வறுக்கப் பயன்படுத்தப்படும் பர்னர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.