டெல்லி புறப்பட்டார் அமித்ஷா

சென்னை, நவ.22-
உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று (சனிக்கிழமை) சென்னை வந்தார். இந்த பயணத்தின் போது ரூ.62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்ட பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதையடுத்து பா.ஜ.க. உயர்மட்ட குழுவினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன.
இந்த நிலையில் 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்ல விமான நிலையம் புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.