டெல்லி போலீஸ் கமிஷனர் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி, அக். 12- டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிராக வழக்கறிஞர் சதர் ஆலம் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராகேசை டெல்லி போலீஸ் கமிஷனராக மத்திய உள்துறை அமைச்சகம் நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்யும்படி கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில், ஆலமின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளனர்.