டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு: ஆஸி. வீரர்மேத்யூ வேட் அறிவிப்பு

சிட்னி, மார்ச் 18- டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சிட்னியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளம் வீரர்களுக்கு வழிவிட்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இருப்பினும் தொடர்ந்து ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார். விக்கெட் கீப்பரான மேத்யூ வேட், ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,613 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் அடங்கும். மேலும் விக்கெட் கீப்பிங்கின்போது போது 74 கேட்சுகளையும், 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.