டைட்டானிக்கை பார்க்க புதிய நீர்மூழ்கி கப்பல்

ஓஹையோ: மே.29 – அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் கோடீஸ்வரரான லேரி (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
74 வயதான அவர், சாகச பிரியர். டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Acrylic-hulled வகையில் இந்த நீர்மூழ்கி இருக்கும் என தெரிகிறது. பலகட்ட சோதனை மேற்கொண்ட பிறகு, முறையாக சான்று பெற்று ஆழ்கடல் சாகசத்துக்கு இந்த நீர்மூழ்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் சுமார் 12,500 அடி ஆழத்தில் செல்லும் இந்த நீர்மூழ்கி வெறும் பயணமானதாக மட்டுமல்லாமல் அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
இது குறித்து லேரி தெரிவித்துள்ளதாவது. டைட்டானிக் கப்பலை பார்க்க செல்லும் வெறும் பயணம் அல்ல. இது ஆய்வு சார்ந்த மிஷன். இதன் மற்றொரு நோக்கம் என்னவென்றால் பாதுகாப்பான முறையில் ஆழ்கடலுக்கு பயணிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபிப்பது. இதன் மூலம் மீண்டும் மீண்டும் ஆழ்கடல் பயணம் மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.