டோல்கேட்டில் பசு படுத்து இருந்ததே விபத்துக்கு காரணம் புதிய தகவல்

உடுப்பி: ஜூலை. 21 – டோல் கேட்டில் பசு ஒன்று படுத்திருந்ததே நான்கு பேர் இறந்துள்ள ஆம்புலன்ஸ் விபத்துக்கு காரணம் என ஓட்டுநர் ரோஷன் தெரிவித்தார். பைந்தூரு தாலூகாவின் ஷிரூரு டோல் கேட்டில் நேற்று இரவு மோதி அம்புலன்ஸ் உருண்டு விழுந்ததில் நான்கு பேர் இறந்திருக்குப்பத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த டோல் கேட் ஊழியர் மற்றும் வேறு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ரோஷன் ஆம்புலன்சுக்கு குறுக்கே பசு இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளார். நான் உடுப்பியின் ஆதர்ஷா மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை மாற்ற வேகமாக சென்றுகொண்டிருந்தேன். ஷிரூரில் முதல் கேட் இரண்டாவது கேட் உள்ளது. அவசர பிரிவுக்கான வரிசையில் முதல் கேட் திறந்துள்ளார். இரண்டாவது கேட் திறக்கும்போது அங்கு பசு ஒன்று படுத்திருந்தது. அதனால் எனக்கு என்ன செய்வது என உடனே தோன்றவில்லை. பசு மற்றும் இரண்டு டோல் கேட் ஊழியர்கள் அங்கேயே இருந்தனர். இதனால் விபத்து ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உருண்டது . இந்த பயத்தால் நான் இதனால் பின்பக்கம் பிரேக் போட்டதால் விபத்து நடந்தது. என தெரிவித்துள்ளார். ஓட்டுனரின் அதி வேகம் மற்றும் அஜாக்கிரதையால் தான் பைந்தூரு தாலூகாவின் ஷிரோரு டோல் கேட் மீது ஆம்புலன்ஸ் மோதி உருண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் மோதிய காட்சிகள் சி சி டி வியில் பதிவாகியுள்ளன. இந்த கொடூர விபத்துதற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.