தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கம்

திருப்பூர்: ஏப் 23- தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் நீக்கம், குளறுபடி தொடர்வதால் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உரிய தகுதி இருந்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட விஷயம், தற்போது பலரின் மனக்குமுறலாக மாறி வருகிறது. இது தொடர்பாக திருப்பூர் காதர்பேட்டையை சேர்ந்தவர்கள் கூறும்போது, “கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலில் வாக்களித்தும், தற்போதைய மக்களவை தேர்தலில் எங்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முக்கிய தேர்தல்களில் கூட வாக்காளர் பட்டியலில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் எங்கள் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதுவும் தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்றபிறகுதான், எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது, மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்றார்.ஒரு குடும்பத்தில் 4 பேர் சென்று வந்தால் கூட, ரூ.2 ஆயிரத்துக்கு மேல் செலவாகும். இதனால் பலரும் வேலை செய்யும் இடத்திலேயே வாக்களிக்காமல் தங்குகிறார்கள். இது போன்ற பொருளாதார ரீதியிலான காரணங்கள் வாக்குப்பதிவு சதவீதம் உயராமல் இருக்க முக்கியக் காரணம். எனவே, இதுபோன்ற சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் பெயர் நீக்கம் மற்றும் சேர்க்கையில் முழுமையான நடவடிக்கையை கையாள வேண்டும்.
இதனால் இரண்டு முறை பதிவாவது தடுக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்தால் பெரும்பாலான குழப்பங்கள் தீரும். ஆதார் எண்ணை இணைக்கும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம் பெறுவதை நிச்சயம் தவிர்க்கலாம். இதை செய்ய தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இது போன்ற குளறுபடிகளை தடுக்கும் போதுதான், எதிர்காலத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முடியும்” என்றனர்.