தங்கம் விலை உயர்வு

சென்னை : ஜூன் 18-சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 53,560க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.6695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.53,440க்கு விற்கப்பட்டது. 13ம் தேதி ஒரு பவுன் ரூ.53,280, 14ம் தேதி பவுன் ரூ.53,200 என விலை குறைந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது.
அதாவது, கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,705க்கும், பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு பவுன் ரூ.53,640க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.