தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு

சென்னை: மார்ச்.2-
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மார்ச்.2) சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.47,520-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை ஏற்றம் பெற்று வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.5,940-க்கு விற்பனையாகிறது. சரவனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.47,520-க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.51,280-க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.77,000 -ஆக இருக்கிறது.