தங்கம் விலை குறைந்தது

சென்னை: ஜூன்.1- சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. தங்கம் விலை கடந்த 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை தொட்டது. மறுநாள் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,880க்கு விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.54,880க்கு விற்பனையாது.
23ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. 27ம் தேதி சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனையானது. 28ல் ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டது. 29-ம் தேதி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டது. 30-ம் தேதி ரூ.360 குறைந்து 53,840-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.98 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.