தங்கம் விலை குறைந்தது

சென்னை: டிச.16- சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம் விலை அவ்வப்போது சரிந்தும், ஏற்றம் கண்டும் வருகிறது.
அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கிடையே, இந்த வார தொடக்க நாளில் இருந்து தொடர்ந்து, தங்கம் விலை குறைந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,790க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.79.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.