
சென்னை: நவம்பர் 26-
சென்னையில் இன்று (நவ.,26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,24) ஆபரண தங்கம் கிராம், 11,520 ரூபாய்க்கும், சவரன், 92,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 171 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (நவ.,25) தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 11,720 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,600 ரூபாய் அதிகரித்து, 93,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து, 174 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில் இன்று (நவ.,26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை ஆகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.94 ஆயிரத்தை கடந்துள்ளது.















