தங்கம் விலை மீண்டும் குறைவு

சென்னை: ஏப். 29: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்கப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.87.50க்கு விற்பனையாகிறது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
அவ்வபோது புதிய உச்சத்தை தொட்டுவருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஏப்ரல் 27ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்து ரூ.54,000 கீழ் சென்றுள்ளது. அதன்படி இன்று ஏப்ரல் 29ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,740க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.53,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.