தங்கம் வென்றார் ஷியோரன்

ஜகார்த்தா, ஜன. 13- பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில்3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் 460.2 புள்ளிகள்குவித்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 459 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.தாய்லாந்தைச் சேர்ந்த தோங் பா ஃபும் ஜாங் சுக் லீ 448.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு அணிகள் பிரிவில் அகில் ஷியோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சுவப்னில் குஷாலே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1,758 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றது. இந்ததொடரில் இதுவரை இந்தியா 10 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.