தங்க நகை கடைகளில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை

மங்களூர் : அக்டோபர் . 31 – வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக உடுப்பி , கார்காளா ,
குந்தாபுரா , படுபிதரி , ப்ரம்மவாரா , புத்தூர் உட்பட பல இடங்களில் தங்க நகை கடைகளில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு இன்னோவா கார்களில் வந்துள்ள வருமான வரி துறை அதிகாரிகள் சிவபாக் நிறுவனத்துக்கு சொந்தமான நகைக்கடைகளில் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
கடலோர மாவட்டத்தின் பல இடங்களில் தன் ஷோ ரூம்களை வைத்துள்ள சிவபாக் நிறுவனங்கள் மீது ஒரே நேரத்தில் சோதனைகள் நடந்து வருகிறது. மங்களூரில் கதறி அருகில் உள்ள சிவபாக் நகை கடையிலும் அதிகாரிகள் சோதனைகள் செய்து வருகின்றனர்.
சுபாஷ் காமத் மற்றும் மகேஷ் காமத் ஆகியோருக்கு சொந்தமான சிவபாக் நகைக்கடைகள் நிறுவனம் மாநிலத்தில் 10 ஷோ ரூம்களை வைத்துள்ளது.
தவிர கோவாவில் ஒரு ஷோ ரூம் உள்ளது. 1935ல் உடுப்பியில் முதல் சிவபாக் ஷோ ரூம் துவங்கப்பட்டதுடன் இப்போது உடுப்பி மற்றும் மங்களூர் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது .