தசராவுக்கு பிறகு ஆரம்ப பள்ளிகள் திறப்பு

மங்களூரு, அக். 13- மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாவது வகுப்புகளை துவங்குவது குறித்து மற்றும் கேரளா , மகாராஷ்டிரா எல்லை பகுதி மாவட்டங்களில் கொரோனா நியமங்களை தளர்த்துவது குறித்தும் தசரா பண்டிகைக்கு பின்னர் நடக்க உள்ள கொரோனா தொழில் நுட்ப ஆலோசனை குழு மற்றும் அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். மங்களூருவின் குத்ரோலி ஸ்ரீ கோகர்னாத்தேஸ்வரா கோயிலின் தசரா நிகழ்ச்சியில் மற்றும் உடுப்பி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று காலை மங்களூருவுக்கு வந்துள்ள முதல்வர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில் கேரளா எல்லை பகுதியின் மாவட்டங்களில் கொரோனா நியமங்களை தளர்த்தி மக்களுக்கு வசதி செய்து கொடுப்பது குறித்து வல்லுநர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுப்போம். என்றார். எல்லை பகுதிகளில் கொரோனா தொற்றின் அளவு , தடுப்பூசிகள் என அனைத்து குறித்தும் ஆலோசனைகள் நடத்தி முடிவு எடுக்கப்படும் . மாநிலத்தில் கொரோனா புகார்கள் குறைந்துள்ளதால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை துவங்குவது குறித்தும் இதே கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது இது குறித்து மத்திய நிலக்கரி அமைச்சரிடம் ஆலோசனனை நடத்தியுள்ளேன். மாநிலத்திற்கு 8 ரேக் நிலக்கரி வர இருப்பதுடன் அதுவே 10 ரேக் வந்தால் பிரச்சனைகள் தீர்ந்து விடும். என்றார். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவது குறித்து மத்தியிலிருந்து இறுதி முடிவு மற்றும் வழிகாட்டுநெறிமுறைகள் அறிவிக்கப்பட வேண்டும். இது நடந்த பின்னர் மாநிலத்திலும் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும். தடுப்பூசிகள் வழங்குவதில் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அதே போல் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதிலும் அவசர கதியில் பணிகள் ஆக வேண்டியுள்ளது. என்றார் . கொரோனா சமயத்தில் மங்களூரு உட்பட சில இடங்களில் பதிவாகியுள்ள போலீஸ் புகார்களை வாபஸ் பெருவது குறித்து தகவல்கள் பெற்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவேன். நெல்லுக்கு ஆதார விலை தொடர்பாக அமைச்சரவையின் துணை கமிட்டி முடிவு செய்யும் இவ்வாறு முதலவர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.