தசரா – அம்சலேகா துவக்கி வைக்கிறார்

பெங்களூர் : ஆகஸ்ட். 29 – உலக பிரசித்திபெற்ற மைசூர் தசராவை இந்தாண்டு துவக்கி வைப்பவர் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கன்னட திரையுலகில் மிகவும் பிரசித்தி பெற்ற இசையமைப்பாளரான ஹம்சலேகா இந்தாண்டு தசரா பண்டிகையை துவக்கிவைக்கவுள்ளார். மைசூரில் இன்று முதல்வர் சித்தராமையா தெரிவிக்கையில் இந்தாண்டு தசரா உற்சவங்களை புகழ் பெற்ற சங்கீத இயக்குனர் ஹம்சலேகா துவக்கிவைப்பார் என தெரிவித்துள்ளார். மைசூரின் மாநில தேவதை சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செலுத்தி பின்னர் நிருபர்களிடம் முதல்வர் பேசுகையில் உலக பிரசித்தி பெற்ற தசரா உற்சவங்கள் அக்டோபர் 15 அன்று காலை 10.15 மணி முதல் 10.30 மணிவரை கூடிய சுப லக்கினத்தில் பிரசித்தி பெற்ற சங்கீத இயக்குனர் ஹம்சலேகாவால் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இந்தாண்டு தசரா பண்டிகையை துவக்கி வைக்கும் நபர் குறித்த முடிவை அமைச்சரவை முதல்வரின் பொறுப்புக்கு ஒப்படைத்திருந்தது. அதன்படி முதல்வர் சித்தராமையா பிரசித்தி பெற்ற இசை இயக்குனர் ஹம்சலேகா பெயரை இறுதி செய்து அவரே துவக்கிவைப்பவர் பெயரையும் தற்போது அறிவித்துள்ளார். மாநில திருவிழா தசரா அக்டோபர் 15 முதல் துவங்க இருப்பதுடன் இது தொடர்ந்து 10 நாட்களுக்கு சீரும் சிறப்புடனும் கொண்டாட இருப்பதுடன் விஜயதசமி நாள் அன்று மாநில தேவதை சாமுண்டேஸ்வரியின் ஜம்பூ சவாரியுடன் இந்த திருவிழா நிறைவு கொள்ளும். இந்த ஆண்டு தசராவை மிகவும் சிறப்பாக கொண்டாடும் வகையில் இளைஞர் தசரா , விவசாயிகள் தசரா , என பல புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தவிர கலாச்சார மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மைசூர் தசராவிற்கான முன்னேற்பாடுகள் மிகுந்த துரித நிலையில் நடந்து வருகிறது., மைசூர் தசராவிற்கு தேவையான நிதியுதவியை உடனடியாக வெளியிட அரசு முற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் தசரா பண்டிகையின் ஜம்பூ சவாரி மிகவும் கண்கொள்ளா காட்சியாகும். ஒன்பது நாட்கள் நடக்க உள்ள இந்த சிறப்பான தசரா உற்சவத்திற்கு கலாச்சார நகரமான மைசூர் முழுஅளவில் தயாராகிக்கொண்டு வருகிறது. ஜம்பூ சவாரி நாளன்று அரண்மனை எதிரில் உள்ள பலராமர் வாயில் அருகில் உள்ள நந்தி கம்பத்திற்கு முதல்வர் பூஜை செய்வதன் வாயிலாக புகழ் பெற்ற தசரா ஊர்வலத்தை துவக்கி வைப்பார் . இந்த ஒன்பது நாட்களும் மைசூரின் பாரம்பரிய மற்றும் இதிகாச கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.இந்த மின் விளக்குகளின் .அழகை மற்றும் தசரா ஊர்வலத்தை காண என மாநிலம் அண்டைய மாநிலங்கள் மட்டுமில்லாது வெளி நாட்டவரும் லட்சக்கணக்கில் குவிய உள்ளனர். இந்த தசரா பண்டிகையின் போது மலர்கண்காட்சிகள் , பழ கண்காட்சிகள் , இளையர் தசரா உட்பட அரண்மனையில் நடக்கவுள்ள சங்கேத இசை கச்சேரிகள் என பலவகையிலும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உள்ளன