தசரா அர்ஜுனா யானை சாவு

ஹாசன் டிசம்பர் 4
மைசூர் தசரா விழாக்களின் போது 8 ஆண்டுகளாக ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாறியை சுமந்த அர்ஜுனா யானை இன்று உயிருடன் இல்லை. வனவிலங்கு ஒன்றை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட போது அர்ஜுனா யானை பரிதாபமாக பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மனின் தங்க அம்பாறையை சுமந்து கம்பீரமாக நடைபெற்ற அர்ஜுனா யானை பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் சகலேஷ்பூர் தாலுகாவில் உள்ள யசலூர் அருகே காட்டெருமையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.