தடங்கம் ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்.தர்மபுரி,ஏப்.22-
தருமபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட திரௌபதியம்மன் கோவில் வளாகத்தில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமை தாங்கினார். இதில் நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மானஸா தலைமையிலான மருத்துவ குழுவினர் ஒன்றிணைந்து,
திரெளபதியம்மன் கோயில் தெரு மற்றும் நேருநகர் ஆகிய கிராம பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கி, காய்ச்சல் தடுப்பு ஆலோசனைகளும் இம்முகாமில் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி, கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் முருகன், வனக்குழு குழு உறுப்பினர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், திருவெங்கடம், கிராம சுகாதார செவிலியர் பழனியம்மாள், ஊராட்சி பணியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.