தடங்கம் ஊராட்சியில் பொங்கல் விழா


தர்மபுரி,ஜன.14,
தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தைப்பொங்கல் விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமை தாங்கினார். விழாவில் புதுப்பானையில் பொங்கலிட்டு, மஞ்சள் கரும்பு, பூஜை பொருட்கள் படைத்து வைத்து, சூரியபகவானை வணங்கி வழிபட்டனர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் இனிப்பு பொங்கல் வழங்கினார். இதில் அ.தி.மு.க கிளை செயலாளர் முருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வன், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் சென்னப்பன், பழனி, கண்ணன், சத்தி, சத்யாசரவணன், விமலாதனபால், சுமதி, ஜெயாராஜேந்திரன், விஜியாகாளியப்பன், விஜியாராமச்சந்திரன்,
ஊராட்சி பணியாளர் சரவணன், வனக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.