தடியால் தாக்கி அண்ணன் கொலை: தம்பி கைது

உடுப்பி, ஏப். 1: ஹெப்ரி தாலுகாவில் உள்ள நல்கூர் கிராமத்தில் உள்ள கஸ்கே பேலஸ் ஜெட்டு அருகே தனது சொந்த அண்ணனை, தம்பி கட்டையால் அடித்துக் கொலை செய்த‌ சம்பவம் நடந்துள்ளது.
பலாஜெசேடு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் (35) கொலை செய்யப்பட்டார். மேலும் குற்றத்தைச் செய்த அவரது தம்பி விஸ்வநாத்தை (30) ஹெப்ரி போலீஸார் கைது செய்தனர்.
கூலி வேலை செய்து வந்த மஞ்சுநாத், விஸ்வநாத் ஆகியோர் ஒரே வீட்டில் வசிப்பதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இரவில் அண்ணன், தம்பி இருவரும் மது அருந்திவிட்டு செல்வது வழக்கம்.மஞ்சுநாத்தின் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு தம்பிதான் காரணம் என்று அண்ணன் கோபமடைந்து, நேற்று நள்ளிரவு தகறாரில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி விஸ்வநாத் தடியால் அண்ணனை தாக்கி உள்ளார்.இதில் பலத்த காயமடைந்த‌ மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெப்ரி போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வநாத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.