தடுப்பு சுவர் கட்டி சாலை விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜைகிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி கொத்தப்பள்ளி கிராமத்தில் அருகே உள்ள ஏரி கரையில் அமைந்துள்ள தார் சாலையை அகலப்படுத்தும் விதமாக ஏரிக்கரைக்கு தடுப்பு சுவர் கட்டி சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை மூலமாக எச் ஐ டி திட்டத்தின் கீழ் 4.25 கோடி செலவில் பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வன்னியர் சங்க மஞ்சுநாத் துணைச்செயலாளர் முனிராஜ் ஆகியோர் தலைமை வகித்தார்.

முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார் முன்னிலை வகித்தார் .

பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளர் இளங்கோ, சிறப்புரையாற்றினார் மேலும்

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வெங்கடேசா செட்டியார், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மற்றும் ,இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் ஜீவா, முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் பத்மநாபன் ,மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.